இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான “கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா-367 ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்படை இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கிடையிலான நல்லெண்ண நோக்கத்திலேயே குறித்த கப்பலின் வருகை அமைந்துள்ளது.
அதற்கமைய இலங்கை கடற்படையின் பாரம்பரியப்படி இந்தோனேசிய கப்பலை வரவேற்றதாகவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நேற்று வந்தடைந்த “கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா-367 ” எதிர்வரும் 22 ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுக்கள் மற்றும் பல நிகழ்வுகளில் இந்தோனேசிய கடற்படைக் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.