- இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது.
- இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை இந்திய பிரதமரும் ஆஸ்திரேலிய பிரதமரும் தொடங்கி வைத்தனர்.
டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதியும் நேரடி டிக்கெட் விற்பனை 18-ந் தேதி காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.
இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1200-ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.10000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.