திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான ஏற்பாடுகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் நிமித்தம் இந்தியா செல்ல விரும்புவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்சேபனை காரணமாக பிணை கோரிக்கையை நிராகரிக்க கோட்டை நீதவான் திலின கம தீர்மானித்தார்.
இதேவேளை, இந்த வழக்கில் சந்தேகநபராக உள்ள கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன விசாரணைக்கு சரியான முறையில் ஆதரவளிக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை எச்சரித்த நீதவான், விசாரணைகளுக்கு இடையூறாக ஏதேனும் உண்மைகள் கண்டறியப்பட்டால், அவர் மீதான பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரான ஜானகி சிறிவர்தன, கடந்த நவம்பர் 04ஆம் திகதி கொழும்பு, கோட்டை, கிறிஸ் சதுக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.