Loading...
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
இந்தப் பதிவுகள் டேட்டா பேங்க் வடிவில் பராமரிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
அத்தகையவர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...