தன்ஷிகா ‘கபாலி’யில் ரஜினி மகளாக நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது ‘விழித்திரு’, ‘காத்தாடி’, ‘களக்கூத்து’, ‘ராணி’, ‘உரு’ படங்களில் நடித்து வருகிறார்.
‘விழித்திரு’ படத்தில் விதார்த் ஜோடியாகவும், ‘உரு’ படத்தில் கலையரசன் ஜோடியாகவும் நடிக்கிறார். இவர் நடித்த ‘ராணி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது மலேசியாவில் நடக்கும் கதை. அங்கு காணாமல் போகும் தனது கணவரை தேடி கண்டு பிடிக்கும் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறார். இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை.
தமிழில் பிசியாக இருக்கும் தன்ஷிகா அடுத்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கில் அவர் நடிக்கும் இந்த படத்தை கவுதம் மேனனிடம் உதவியாளராக இருந்த ரமணா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதுவும் ‘ராணி’ படம் போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இதன் மூலம் தன்ஷிகா தெலுங்கிலும் அழுத்தமாக கால் பதிப்பார் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.