- ஒன்று முதல் பதினாறு முகங்கள் கொண்ட ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன.
- ஒன்று, மூன்று, ஐந்து முகங்கள் கொண்டவை சிவனுக்குரியதாகக் கருதப்படுகின்றன.
ருத் என்பது துயரம் (சம்சார துக்கம்). அத்துயரத்தைப் போக்குவது என்கிற அர்த்தத்திலேயே இந்த மணிக்கு ருத்திராட்சம் என்ற பெயர் வந்தது.
சிவபெருமானின் மூன்று கண்களில் இருந்தும் பொழிந்த நீரில் இருந்து ருத்திராட்சம் தோன்றியதாகக் கூறுகிறார்கள் சிவயோகிகள்.
திரிபுரத்தை எரிக்கும் பொருட்டு, சிவபெருமான் தன் கண்களை மூடி யோகத்திலிருந்தபோது அவரின் கண்களின் இமைகளில் இருந்து நீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. இந்த பூமியைப் பாவங்களில் இருந்து காக்கும் பொருட்டு அவை மரங்களாக உருமாறின. அவையே ருத்திராட்ச மரங்கள் என்று சிவபெருமானே கூறியதாக சிவனடியார்கள் கூறுகின்றனர்.
ருத்திராட்சம் சிவனின் சின்னம். இதை அணிந்து கொள்ளுபவரை போய், பூதம், பிசாசுகள் அண்டாது என்பது திண்ணம்.
ஒருமுறை ஒரு முனிவர் காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவரின் உயிரற்ற உடல் அந்த வழியில் கிடந்தது. அந்த உடலைச் சுற்றி பேய்கள், பூதங்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. முனிவருக்கு அந்த பேபய்கள் எவை என்பது புரிந்தது. இந்து தர்மப்படி இறந்த உடல் எரிக்கப்பட வேண்டும். எந்த அனாதைப் பிணமும் கேட்பாரற்றுக் கிடத்தல் கூடாது.
அதனால் அந்த முனிவர், அந்த உடலுக்கான இறுதிச் சடங்கை செய்ய ஆயத்தமானார். அந்த உடல் உயிரோடு இருந்தபோது அந்த மனிதனுக்குள் இருந்த வஞ்சம், பொறாமை, காமம், பேபராசை, மோகனம், கோபம் ஆகியவையே அந்த உடலைச் சுற்றி பேய்களாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன.
முனிவர் அந்த மனிதனின் உடலின் மேல் ஒரு ருத்திராட்சத்தை போட்டு, சிதைக்கு தீ மூட்டினார். மறுகணமே, அந்த உடலை ஒட்டியிருந்த பேபய்கள் எல்லாம் எரிந்து ஜீவசாந்தி அடைந்தது. ருத்திராட்சத்திற்கு அத்தனை வலிமை உண்டு.
ஒன்று முதல் பதினாறு முகங்கள் கொண்ட ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. இதில் ஒன்று, மூன்று, ஐந்து முகங்கள் கொண்டவை சிவனுக்குரியதாகக் கருதப்படுகின்றன.
ஒருமுக ருத்திராட்சம், தெய்வம் சிவனென்ற ஒன்றே என்பதையும், மூன்றுமுகம் முக்கண்ணனான சிவனையும், ஐந்துமுக ருத்திராட்சம் பஞ்சாட்சரத்தையும் குறிப்பன. ருத்திராட்சத்தில் இயற்கையிலேயே துளை உள்ள மணிகளும் துளையில்லா மணிகளும் கிடைக்கின்றன. ருத்திராட்சத்தின் வழியே வழிகின்ற நீரானது நம் உடலில் பட்டால் அத்தனை துரோகங்களும் பாவங்களும் தீர்கின்றன.
“இலங்குமணி உருத்திர அங்கம் ஒன்றணியில் விலங்கெயிற்று வெம்பூதங்கள் முதலியன மேவா” என்கிறது முதுமொழி ஒன்று.
மிக அரிதாகவே கிடைக்கும் ஒருமுக ருத்திராட்சத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார் என்கிறது ஐதீகம். இதை அணிந்திடின் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். இருமுகம் சளி, மனோ வியாதிக்கும் கர்ப்பிணி பெண்டிற்கும் நன்மை பயக்கும். மூன்று முக ருத்திராட்சம் பாவங்களை தொலைத்து விபத்துகளில் இருந்து நம்மைக் காக்கிறது. நான்குமுகம் உயர்ந்த பதவிகளையும் கண்பார்வையையும் தருகிறது. ஐந்து முகம் அறிவையும் ஆனந்தத்தையும் தரும். ஏழுமுகம் செல்வாக்கு, வசதிகளை தந்து எதிரிகளை அண்டவிடாமல் காக்கிறது.
நல்ல ருத்திராட்சம் நீரில் மூழ்கும் தன்மையுடையது. இத்தகைய ருத்திராட்சத்தை பார்த்தாலும், தொண்டு வணங்கினாலும் மனிதன் கோடி புண்ணியத்தினை அடைவான் என்பது உறுதி.