நீதி அமைச்சின் கீழ் இயங்கும் சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள் சேவையையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நீதி மன்றத்தை நாடவேண்டியிருந்தும் அதற்குரிய பணம் இல்லாமல் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதிருப்பவர்களுக்காக சட்ட உதவி ஆணைக்குழு முன்வருகின்றது.
நீதியமைச்சின் கீழ் இயங்கும் இந்த ஆணைக்குழு கடந்த பத்து வருடங்களில் 99 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்ட உதவி வழங்கியுள்ளது.
குற்றவியல், நிர்வகிப்பு, விவாகரத்து, காணி சிக்கல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளின்போதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிட்டும் வகையில் சட்ட உதவி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள இந்த ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திலோ பிரதேச ரீதியாக இயங்கும் 84 கிளை அலுவலகங்கள் ஊடாகவோ சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.