2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதம் கடந்து அசத்தினார்.
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வே 30 ரன்னில் வீழ்ந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ர்ன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.