ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
அப்போது அவர், கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசினார்.
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா. அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார். இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.