மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகாரபூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம், அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி,தொலைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி
டிக் டாக் செயலி, சீனாவைச் சேர்ந்த ByteDance நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்த நிறுவனத்தின் பயனீட்டாளர் தரவுகளைச் சீன அரசாங்கம் பெறக்கூடும் என்ற பாதுகாப்புச் சந்தேகத்தின்பேரில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதற்குத் தடை விதித்துள்ளன.
தகவல் பாதுகாப்புக் குறித்த அக்கறையே அதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக் டாக் செயலியை உத்தியோகபூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்குவதாக தடை விதித்த நாடுகள் தெரிவித்துள்ளன.