புத்தளம் பிட்ட ரவும் வீதியில் அடையாளம்தெரியாத ஆணொருவரின் சடலமொன்று நேற்று(12.03.2023) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆணொருவரின் சடலமொன்று காணப்படுவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு பொலிஸார் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
புத்தளம் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவில்லையென தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பில் புத்தளம் நீதவானுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி இதன்போது தெரிவித்துள்ளார்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.