Loading...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இருந்து பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு வரவுள்ளது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த குறித்த மேன்முறையீடு மனுமீதான விசாரணையை ஜூலை 4 ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.
Loading...
பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் குற்றச்சாட்டுக்குள்ளாகினர்.
இருப்பினும் இவர்களை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் குறித்த மேன்முறையீட்டை தாக்கல் செய்தார்.
Loading...