தனுஷ் இயக்கும் படம் ‘பவர்பாண்டி’.ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் இதில் இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை தனுஷ் திறமையாக இயக்குவதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்ய தர்ஷினி இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்த தனுஷ், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘திவ்யதர்ஷினியின் கவுரவ வேடம் படமாக்கப்பட்டது. அவர் நடித்த விதத்தை பார்த்து மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். அருமை டி.டி.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள திவ்ய தர்ஷினி, ‘நன்றி சார். முகத்தில் மட்டும் தான் நம்பிக்கை. உள்ளே இதயம், லிவர், கிட்னி எல்லாம் டப்பா டான்ஸ்சிங் சார்’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.