எண்ணூர் குழந்தை ரித்திகா என்ற 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் பக்கத்து வீட்டுப் பெண் ரேவதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுப் பெண்குழந்தை ரித்திகா நேற்று முன் தினம் காணாமால் போய் விட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
குழந்தைக் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் குழந்தை காணாமல் போன வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று குழந்தையின் வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து ரித்திகாவின் சடலம் மீட்கப் பட்டது.
குழந்தை கடத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறீயலில் ஈடுபட்டனர். குழந்தை கடத்தப் பட்ட பகுதியான எண்ணூரில் மக்கள் பிரச்சினைகளுக்குப் புகார் அளிக்க ஒரு காவல் நிலையம் கூட இல்லை என குற்றச்சாட்டை எழுப்பி மக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் திருவொற்றீயூர் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே பேசி குழந்தை ரித்திகா கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப் பட போதிய நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருவதாக வாக்களித்த பின் மக்கள் கலைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது குழந்தையின் பக்கத்து வீட்டுப் பெண் நகைக்காக குழந்தையை கொன்றதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ரேவதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ரேவதியிடமிருந்து குழந்தை ரித்திகாவின் நகைகளை போலீஸார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.