Loading...
ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவாக நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
அத்துடன், சவால்களை வெற்றிக்கொள்ள கூடியவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பது உண்மையான தலைமைத்துவம்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறந்த தலைமைத்துவம் உள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
Loading...