வெறும் கையுடன் கோவிலுக்கு செல்ல வேண்டாம்.
எளிமையான உடைகளை அணிந்து செல்ல வேண்டும்.
கோவிலுக்கு செல்லும் முன்பு சுத்தமாக குளித்துவிட்டு, எளிமையான உடைகளை அணிந்து செல்ல வேண்டும். விலை உயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான நகைகளை தவிர்க்க வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன்பு வீட்டில் உள்ள சாமியின் உருவப்படங்களையும், சிலைகளையும் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வெறும் கையுடன் கோவிலுக்கு செல்ல வேண்டாம். எண்ணெயோ, கற்பூரமோ, பூவோ வாங்கிச் செல்லலாம்.
பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். கோவிலின் உள்ளே சென்றதும் தீப கம்பத்துக்கு முன் நின்றுகொண்டு முக்கிய விக்கிரகத்தை பார்த்து வணங்க வேண்டும். கோவிலின் சுற்றுப் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள உபதேவர்களை வணங்கி சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை சுற்றி வந்தபின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து முக்கிய தேவனை வணங்கியபின் புறப்படவேண்டும்.
விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும், சிவனுக்கு தெய்வாம்சமான மூர்த்திகளுக்கும் 3 பிரதட்சணமும், விஷ்ணுவுக்கும், தேவிக்கும் 4 முறை பிரதட்சணமும் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி வரும்போது பலி கற்களுக்கு வெளியே சுற்ற வேண்டும்.