Loading...
பழங்களை விட பழத்தின் கொட்டைகளில் தான் அதிக மரபணுக்கூறுகள் நிறைந்துள்ளது.
அந்த வகையில் பலாக்கொட்டையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, விட்டமின் A, B, C, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
Loading...
பலாக்கொட்டையின் மருத்துவ நன்மைகள்
- பலாக்கொட்டையில் உள்ள லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் போன்றவை புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- பலாக்கொட்டையில் உள்ள பிளேவனாய்டுகள் நமது உடம்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- பலாக்கொட்டையை நன்றாக வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிட்டு வந்தால், குடற்புண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிர்ச்சனைகள் வராமல் தடுக்கச் செய்கிறது.
- பலாக்கொட்டையில் குழம்பு வைத்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது நமது உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதுடன், குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.
குறிப்பு
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் சாப்பிடாமல், அதை உணவாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் அதை தனியாக சாப்பிட்டால் அது நமது உடலில் உஷ்ணத்தை அதிகரித்து, மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் கடும் வலியை ஏற்படுத்திவிடும்.
Loading...