- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
பிரெட் – 6 துண்டுகள்
உருளைக்கிழங்கு – கால் கிலோ
பன்னீர் – 100 கிராம்
துருவிய சீஸ் – விருப்பத்ற்கேற்ப
ப.மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சில்லி ப்ளோக்ஸ் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
ஆரிகானோ – 1 தேக்கரண்டி
சோள மாவு – கால் கப்
பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சோள மாவில் 1 தேக்கரண்டி சில்லி ப்ளோக்ஸ், சிறிதளவு உப்பு, ஆரிகானோ, சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், சில்லி ப்ளோக்ஸ் 1 தேக்கரண்டி, தனியா தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்து வரும் போது துருவிய சீஸை சேர்த்து வதக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
பிரெட்டில் மேல் இந்த மசாலாவை தடவவும்.
பின்னர் மசாலா தடவிய பிரெட்டை நீளமான துண்டுகளாக வெட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டிய பிரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் பிங்கர்ஸ் ரெடி.