- குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும்
- கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்.
நம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்திவாய்ந்த கருவி கல்வியாகும். கல்வி ஒருவருடைய அறிவையும், ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தை தரும்.கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை.
கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.
கல்வி ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், கருத்துப்பரிமாற்றத் திறனையும் கற்றுத்தருகிறது. கற்றவர்களுக்கு நினைத்ததை தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதோடு , மற்றவர்களின் எண்ணங்களையும் பல கோணங்களில் ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறும் வல்லமை பெற்றிருப்பர். இதனால் அவர்களால் எந்த சூழலையும் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது.
கல்வி ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவை தருவதோடு, அதனால் அவர்களால் எந்த எந்திரத்தையும் எளிதாக உபயோகிக்க முடிகிறது மற்றும் பல துறைகளில் அவர்கள் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு தலைமுறையினரை அடுத்த தலைமுறையினருக்கு முறையாக வழி நடத்த வேண்டும் என்பதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், புதியகண்டுபிடிப்புகளுக்கும் கல்வி உதவி புரிகிறது.