பிரபல நடிகர் ஒருவர் நடிகை ஜோதிகாவை ஒரு தலையாக விரட்டி விரட்டி காதலித்த செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜோதிகா. இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவை கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
சூர்யா தற்போது சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார்.
தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
நடிகரின் ஒருதலைக் காதல்
இந்நிலையில் இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. நடிகை ஜோதிகாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு நடிகர் சிம்பு ஜோதிகாவை உருகி உருகி காதலித்திருக்கிறார்.
சிம்புவுக்கு நடிகை ஜோதிகா மீது ஒருதலையாக காதல் இருந்ததாகவும், எனவே பிளான் போட்டு தான் இயக்கிய மன்மதன் படத்தில் அவரை நடிக்க வைத்தாராம்.
ஆனால் ஜோதிகா, சூர்யா மீது மிகவும் தீவிரமான காதலில் இருந்ததால், சிம்பு காதால் ஒருதலை காதலாகவே இருந்து அவரின் காதல் கைகூடாமல் போனதாக கூறப்படுகிறது.