Loading...
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் விஷயமாக அண்மைச் செய்திகள்.
மூன்றே மாதங்கள் மட்டுமே வேலை செய்த டிரைவர் சுனிலுக்கு, பாவனாவை சீரழிக்க வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே இருந்துள்ளது. அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்க நினைத்தார் சுனில்.
அதற்காக பெரிய சதித் திட்டங்களே தீட்டியுள்ளனர். பாவனாவின் ரியல் கேரக்டர் கொஞ்சம் அதிரடியானது. பட்டென்று முகத்திற்கு முகம் பேசிவிடுவார்.
கொஞ்சம் முன் கோபியும் கூட. அப்படி என்னவோ அந்த டிரைவருக்கும் நடந்துள்ளது என்கிறார்கள்.
ஏற்கனவே முத்ததூட்ஸ் பைனான்சியர் குடும்பத்து கொலையிலும் பாவனா பெயர் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சூட்டிங் எங்கு நடந்தாலும் தனியே போய் வருவது பாவனாவின் வழக்கம். தைரியமான பெண்ணும் கூட.
தமிழில் பிசியாக இருந்த போது தனியே வந்து இறங்கி சூட்டிங் முடிந்ததும் கிளம்பி விடுவார்.யாரிடமும் நெருக்கமாக பழகும் குணம் இல்லை.
பாவனாவை செக்ஸ் தொல்லை கொடுக்கும் திட்டத்திற்கு எர்ணாகுளம் சூட்டிங் ஸ்பாட் தான் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் சதிக்கு தேர்ந்தெடுத்தனர். இரவு சுனில் ஏற்பாடு செய்த கார் ஓட்டுநர் பாவனாவின் காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது வேறு சிலர் வலுக்கட்டாயமாக அந்தக் காரை மடக்கி பிடித்து, அதனுள் நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாவனாவை மீட்கும் போது முற்றிலும் சிதைந்து மூர்ச்சையாக கிடந்துள்ளார். அவரை அலங்கோலக் கோலத்தில் வீடியோவும் எடுத்து விட்டனர் பாவிகள்.
இதை தொடர்ந்து கேரளா முழுக்க போராட்டம் வெடித்துள்ளது. அரசுக்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நடிகர்கள் நடிகைகளும் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
Loading...