உலகின் மிகப்பெரிய நீல திமிங்கலத்தின் இதய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீல திமிங்கலத்தின் இதயம்
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில்,
நீல திமிங்கலம்தான் உலகின் மிகப்பெரிய விலங்காக கருதப்படுகிறது. 181 கிலோ எடையுள்ள நீலத் திமிங்கலத்தின் இதயம் பாதுகாக்கப்படுவதால் இந்தப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இது ஒரு நீல திமிங்கலத்தின் பாதுகாக்கப்பட்ட இதயம். இதன் எடை 181 கிலோ, நீளம் 1.5 அடி, அகலம் 1.2 அடி. இதன் இதயத்துடிப்பு 3.2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கேட்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.