முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சரத்பொன்சேகாவுக்கு அரசியல் ரீதியில் தண்டனை விதிக்கப்படவில்லை.
மாறாக சட்டத்தின் அடிப்படையிலேயே அவர் தண்டிக்கப்பட்டார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கப்படாதிருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
தற்போது அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன. மேலும், இந்த அரசாங்கம் பிரபாகரனை கொலை செய்தமைக்காகவும் வருந்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த போது தமது குடும்ப உறுப்பினர்கள் பூஜை வழிபாடுகளை நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.