Loading...
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் அருள்நிதி தமிழரசன். அவர் நடிப்பில் வெளிவந்த `மவுன குரு’, `டிமான்டி காலனி’, `நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும்’, `ஆறாது சினம்’ உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் அருள்நிதிக்கு ஒரு முக்கிய இடத்தை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அருள்நிதி, ராதாமோகன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Loading...
ராதா மோகன் இயக்கும் அந்த படத்திற்கு `பிருந்தாவனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராதாமோகன் `மொழி’, `பயணம்’ உள்ளிட்ட இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தது.
முன்னதாக ராதாமோகன் இயக்கத்தில் வெளியான `மொழி’ படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்த நிலையில், `பிருந்தாவனம்’ படத்தில் அருள்நிதி காது கேட்காத, வாய் பேச முடியாத நபராக நடிக்க உள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார். அருள்நிதியின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Loading...