இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ஒரு பெரிய தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியுடனான கூட்டம் முடிந்தபிறகு அவர் என்னிடம் வெளியே போகலாமா? என்று கேட்டார். நான் வேலை விஷயமாகவா? எனக் கேட்டபோது இல்லை இது வேறு விஷயம் என கூறினார். நான் கோபத்துடன் இங்கிருந்து கிளம்புங்கள் எனக் கூறியபோது அவ்வளவு தானா? என சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார்.
இந்த விஷயம் குறித்து கேள்விப்படுபவர்கள் சினிமா துறை இப்படித்தான் என தெரிந்து தானே அங்கு வருகிறீர்கள். பின்னர் ஏன் இப்பொழுது இதுகுறித்து கூறுகிறீர்கள் எனக் கேட்பர். நான் ஒரு நடிகை. திரையில் கவர்ச்சியாக நடிப்பதால் என்னை மோசமாக நடத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. இது என்னுடைய வாழ்க்கை. பாலியல் தொந்தரவுகளை சகித்துக்கொண்டு தான் சினிமா துறையில் இருக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல.
பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கூறுவதை விட்டுவிட்டு பெண்களை எப்படி நடத்த வேண்டும்? அவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
திரையுலகில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பெண்களை அவமானப்படுத்துவது நிகழ்ந்து வருகிறது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. நம் கல்வி தகுந்த பாடங்களைக் கற்றுத்தரவில்லை. இதைப் பற்றிப் பேசப் பயப்படும் எல்லாப் பெண்களுக்குமாக நான் இங்கு இதைப் பற்றிப் பேசுகிறேன்.
இப்போது இதைப் பற்றிப் பேசாவிட்டால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கும். சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை நீக்க முடியாமல் போய்விடும். நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. என் எல்லா சகோதரிகள், நண்பர்களும் இதுபற்றி பேசவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.