நடிகை ஆத்மிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் நேற்று வெளியானது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இவர் கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சமீபத்தில் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று (மார்ச் 17) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ஆத்மிகா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.