இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’.
இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.
இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் ‘இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.