மும்பையில் ஹேலி மேத்யூஸ் 35, இஸ்ஸி வோங் 32, ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு முனையில் இஸ்ஸி வோங் அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 32 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.
இறுதியில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக ஹேலி மேத்யூஸ் 35, இஸ்ஸி வோங் 32, ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.