முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது.
முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவை 188 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.
ஆனால் பேட்டிங்கில் தொடக்க வரிசை வீரர்கள் சொதப்பினர். 39 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்தது. இதனால் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் சிறப்பான நிலையில் உள்ளார்.
மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதை சரி செய்ய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முயற்சிப்பார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் உள்ளனர். நாளைய போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.