ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் ‘வேலைக்காரன்’ என சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் திகதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்லுக் லுக் வரும் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதியும், படம் வரும் விநாகர் சதூர்த்தி தினமான ஆகஸ்ட் 25-ம் திகதியும் வெளிவரும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் அனிரூத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.