அமெரிக்காவுடன் பேர் ஏற்பட்டால், நாட்டுக்காக களமிறங்க 800,000 குடிமக்கள் பதிவு செய்திருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வட கொரியாவின் அரச செய்தித்தாள் ஒன்று இந்த செய்தியை இன்று(18.03.2023) வெளியிட்டுள்ளது.
சாதாரண ஊழியர்களும் மாணவர்களும் அமெரிக்காவுக்கு எதிராக களமிறங்க தயார் என தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக உள்ளூர் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர தேசபக்தியின் வெளிப்பாடு
இதேவேளை இளம் சமுதாயத்தினரின் இந்த ஆர்வம், வடகொரியாவை மொத்தமாக அழிக்க திட்டமிட்டுவரும் போர் வெறி பிடித்த நாட்டுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இராணுவத்தில் சேரும் இளைஞர்களின் உற்சாகம்,தேசிய மறு இணைப்பு என்ற மாபெரும் நோக்கத்தை அடையவும் இறுதி முயற்சியில் ஈடுபட்டு வரும் போர் வெறி பிடித்தவர்களை இரக்கமின்றி அழித்தொழிக்கவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் தீவிர தேசபக்தியின் தெளிவான வெளிப்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.