அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான வேலைநிறுத்தங்களால் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டால், அந்தந்த சேவைகளைப் பேணுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களை அழைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களுக்கமை, ஏதேனும் காரணங்களால் துறைமுக சேவைகள் தொடர்ந்து தடைபட்டால், தெற்காசியாவின் பலம் வாய்ந்த துறைமுக இயக்குனரை அழைப்பது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துறைமுகத்திற்கு மேலதிகமாக மின் உற்பத்தித் துறை மற்றும் புகையிரத சேவை போன்ற துறைகளில் தொழில்சார் நடவடிக்கைகளால் மக்கள் படும் துன்பங்களை குறைக்கும் வகையில் இந்த யோசனையை அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களை உரிய சேவைகளுக்கு அழைத்தால், முப்படையினரின் பாதுகாப்பில் சேவைகளை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என மேலும் தகவல் வெளியாகியுள்ளது.