Loading...
எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில், சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது குறித்து, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். மேலும், புகார் மனுவும் அவர் சார்பில் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து வழங்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்த தகவலை, நேற்று மாலை பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வரும் 23–ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
Loading...
Loading...