யாராலும் அவ்வளவு எளிதில் உடல் எடையை அதிகரிக்கவோ அல்லது குண்டாகவோ முடியாது. ஆனால் தொடர்ச்சியான வயிற்று உப்புசத்தாலும், ஒருவரது வயிறு வீங்கி குண்டாகும் வாய்ப்புள்ளது. ஒருவரது வயிறு அடிக்கடி உப்புசத்துடன் இருப்பதற்கு நமது ஒருசில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
அந்த பழக்கவழக்கங்களை தவிர்த்து, ஒரு நாள் உடல் முழுவதையும் சுத்தம் செய்யும் ஒரு செயலை செய்தால் போதும். எப்போதும் வீங்கி இருக்கும் வயிற்றைக் குறைக்கலாம்.
க்ளூட்டன் சகிப்புத்தன்மை
பலரும் தங்களுக்கு இருக்கும் க்ளூட்டன் சகிப்புத்தன்மையை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகிறார்கள். ஆனால் இப்பிரச்சனை இருந்தும், க்ளூட்டன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது வயிறு உப்புசத்தால் அவஸ்தைப்படச் செய்யும். இதைத் தவிர்க்க சில வாரங்கள் க்ளூட்டன் நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
மன அழுத்தம்
எப்போதும் மன அழுத்தத்துடன் இருந்தால், அது உடலை வீங்கச் செய்யும். எப்படியெனில், மன அழுத்தத்தில் இருக்கும் போது ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால், செரிமானத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு வயிறு பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே தினமும் தவறாமல் மனதை அமைதிப்படுத்தும் தியானத்தை தினமும் செய்து வாருங்கள்.
ஒழுங்கற்ற கழிப்பறை பழக்கம்
ஒருவர் தினமும் தவறாமல் மலத்தை வெளியேற்றாமலோ, சீரான இடைவெளியில் சிறுநீர் கழிக்காமலோ இருந்தால், அதனால் வயிறு வீங்கி காணப்படும். இதனைத் தவிர்க்க சூப், ஜூஸ், நீர் போன்றவற்றை அதிகம் பருகுங்கள்.
வேகமாக சாப்பிடுவது
உணவை சாப்பிடும் போது எப்போதும் மெதுவாக மென்று விழுங்க வேண்டும். அதை விட்டு வேகமாக சாப்பிட்டால், அதிகளவிலான காற்றை விழுங்கி, வயிற்று உப்புசத்தை சந்திக்க நேரிடும்.
போதிய நீர் அருந்தாமை
ஒருவர் நாள் முழுவதும் போதிய அளவில் நீரை அருந்தாமல் இருந்தால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கி, குண்டாக வெளிக்காட்டும். எனவே தினமும் சரியான அளவில் நீரைப் பருக வேண்டியது அவசியம்.