நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் முடிவடையும்.
வேலைப்பளு கூடும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
உறவுகளால் உற்சாகம் காணும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாயிருக்கும். தொழில் ரிதீயாக எடுத்த கூட்டு முயற்சி வெற்றி பெறும். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
எதிரிகள் உதிரியாகும் நாள். வாங்கல்– கொடுக்கல்களில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல்கள் உண்டு. வியாபார விருத்திக்கு பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொடர்ந்து வந்த கடன்சுமை குறையும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பயணம் பலன் தரும்.
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கடித அனுகூலம் உண்டு.
அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும் நாள். சவால்களைச் சமாளிப்பீர்கள். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நபர் உங்களைத் தேடி வரலாம். ஒரு வகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் செலவுகள் ஏற்படலாம்.
நல்ல காரியம் நடைபெறும் நாள். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வீடு, இடம் வாங்கும் விருப்பம் நிறைவேறும்.
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பிறருக்காக பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். அரசு வழியில் சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.