Loading...
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் தொகைக்கான நிறைவேற்று சபையின் அங்கீகாரம் இன்று (திங்கட்கிழமை) கிடைக்கப்பெறவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை நேரப்படி நாளை காலை விசேட ஊடக சந்திப்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 4 வருடங்களில் 8 கட்டங்களாக இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடன் நிவாரணத்தின், முதல் கட்டமாக இலங்கைக்கு 390 மில்லியன் டொலர் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
Loading...