மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டியில் இந்தியா வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.
முன்னதாக தனது உறவினர் திருமணத்திற்காக சென்றதால் முதல் போட்டியில் பங்கேற்காத கேப்டன் ரோகித் சர்மா 2-வது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடினார்.
அந்த போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அங்கிருந்த சிலர் ரோகித் சர்மாவுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற நிலையில் ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார். ஆனால் அப்போது அந்த ரசிகர் பூ கொடுப்பதற்கு முன்பாக ஏற்கனவே சில ரசிகர்களிடம் பெற்று தனது கையில் வைத்திருந்த ரோஜா பூவை “இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அந்த ரசிகரிடம் ரோகித் சர்மா கொடுத்தார். அப்போது அந்த ரசிகர் மிகவும் நன்றி என்று ஆனந்தமாக தெரிவித்ததார். ஆனால் அதற்கு நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று அந்த ரசிகர்களிடம் வேடிக்கையாக விளையாட்டுக்கு கலகலப்பாக சொல்லிக் கொண்டே ரோகித் சர்மா அங்கிருந்து சென்றார்.
அந்த ஆனந்தத்துடன் அந்த ரசிகர் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு ரசிகரிடம் இப்படியா சொல்வது என்று சிரிப்பதுடன் ரசிகர்களிடம் பாகுபாடின்றி விளையாட்டாக பழகும் கேப்டன் ரோகித் சர்மாவை மனதார பாராட்டுகிறார்கள்.