ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் அளிப்பதற்கு வருகை தராமல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த வழக்கு விசாரணையின் போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க நாமல் தயாராக உள்ளார் என நாமலின் சட்டத் தரணி தெரிவித்திருந்தார்.
எனவே, நாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கமைய நாமல் நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.