விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் லாவண்யா தேவி.
இவர் தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தில் சொப்னா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. அதன்பின்னர் விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் லாவண்யா, தற்போது அருவி சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 44 வயதாகும் லாவண்யா தேவி, தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவரின் திருமணம் திருப்பதியில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் லாவண்யாவுடன் பணியாற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.