Loading...
நாடளாவிய ரீதியில் இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் இன்று முதல் (23) விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
Loading...
பாடப்புத்தக விநியோகம்
இன்று ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினை ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலையில், பாடசாலை பாடப்புத்தக விநியோகம் இன்று (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...