சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோட் 12 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளன. தற்போது ரெட்மி நோட் 12 சீரிசில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி புதிய ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. மேலும் இது ரெட்மி நோட் 12 என்றே அழைக்கப்படுகிறது. புதிய 4ஜி வேரியண்ட் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் அங்கமாக அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் பக்கத்தில் அதன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் தோற்றத்தில் அதன் 5ஜி வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அம்சங்கள் ரெட்மி நோட் 11 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. இதில் 6.67 இன்ச் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யுஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.