பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகிய சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணியில் ஈடுபட்டிருந்த சிம்பு, தற்போது ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார்.
இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ‘ரம்’ படத்திற்காக அனிருத் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடிய நிலையில் தற்போது சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு இசையமைக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோசங்கர் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
சேதுராமன் இயக்கவுள்ள இந்த படத்தை விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்கின்றனர்.