ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள்.
உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி தோல்வியை மறந்துவிடக்கூடாது.
ஆஸ்திரேலியாவிடம் தோற்று சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது தொடர்பாக முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியா பீல்டிங்கில் கடும் நெருக்கடி கொடுத்தது. கோலி-ராகுல், ரோகித் சர்மா-சுப்மன்கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பை தவிர இந்தியாவால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. இதுதான் தோல்விக்கு காரணமாகும்.
270 முதல் 300 ரன் இலக்கு இருக்கும் போது 90 அல்லது 100 ரன் பார்ட்னர்ஷிப் அவசியமானது.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மிகவும் நன்றாக இருந்தது. இதுதான் இரு அணிகளுக்கான வித்தியாசமாகும்.
ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள். இதனால் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது.
ஆஸ்திரேலியாவை உலக கோப்பையில் மீண்டும் சந்திக்க நேரிடும். அப்போது இதுபோன்று மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதால் கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.