இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி சமந்தா இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘குஷி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.