கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் என்டிஆர்30.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்துக் கொண்டனர். மேலும் ராஜமவுலி கிளாப் போர்ட் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.