மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய மோட்டோ G13 மாடல் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தனது மோட்டோ G73 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மிட் ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் மோட்டோரோலா ஈடுபட்டு வருகிறது. இவற்றில் மோட்டோ G53 மற்றும் G53s மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவைதவிர மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ G13 ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ G13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மோட்டோ G13 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ IPS LCD பேனல், 90Hz ரிப்ரெஷ் ரேட், பாண்டா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ G52 பிராசஸர், மாலி G-52 2EEMC2 ஜிபியு, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G13 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி, என்எஃப்சி, 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.