வவுனியாவில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முச்சக்கரவண்டி சாரதி சங்கத் தலைவரான இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்படங்களில் பல்வேறுபட்ட நிலையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
சேவைக் கட்டணங்கள்
இது தொடர்பில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் ரவீந்திரனிடம் தொடர்பு கொண்ட போது, முச்சக்கரவண்டி சேவைக் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அனைத்து சாரதிகளுடனும் கலந்துரையாடுவதற்கான கூட்ட ஏற்பாடு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும், மிக விரைவில் இது தொடர்பாக கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.