இந்தியா 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வருண் தோமர்- ரிதம் சங்வான் இணை 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
வருண் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியாவின் ரித்ரான்ஷ் பட்டீல்- நர்மதா நிதின் ராஜூ ஜோடி 16-8 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியாங்கு ஜாங்- ஹனான் யு இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.