வனச்சரக அலுவலர் எச்சரிக்கை
வீடுகளில் கிளி வளர்க்க கூடாது
திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மு.பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஒரு சிலர் கிளிகளை வைத்து ஜோசியம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு பறவைகளை யாரும் வீடுகளில் வளர்க்க கூடாது. கிளிகள் மற்றும் உள்நாட்டு பறவைகளை வியாபார நோக்கத்துடன் வளர்ப்பது சட்டப் படி குற்றம் ஆகும்.
இதுநாள் வரையில் போதுமான விழிப்பு ணர்வு ஏதுமில்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் இனியும் இதுபோன்று ஈடுபடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பகுதியில் கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்த 2 பேரிடம் இருந்து 2 கிளிகளை மீட்டனர். மேலும் அவர்களை எச்சரித்து வனத் துறையினர் அனுப்பினர்.