தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் நிதி அமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தின் பதவி பறிபோயுள்ளது. இதனால் பொதுப்பணித்துறையால் அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சர் இல்லத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விவசாய குடும்பத்தில் இருந்து வந்த பன்னீர் செல்வம், தான் அமைச்சராகிவிட்டபோதிலும், மாடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்ட அமைச்சர் இல்லத்தில், கொட்டகை ஒன்றை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இவரது அமைச்சர் பதவி பறிபோயுள்ள நிலையில், அந்த வீட்டினை காலி செய்யும்படி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தன்னை பார்க்க வரும் ஆதரவாளர்களிடம் தான் வளர்த்து வந்த மாடுகளை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளாராம்.
மாடுகளை பிரியமாக வளர்த்து வந்ததால், அதனை தற்போது வளர்க்கமுடியாத நிலைக்கு ஆளானதை நினைத்து பன்னீர் செல்வம் கண்ணீர் விட்டுள்ளாராம். அரசியல் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், மாடுகளை அப்புறப்படுத்தி வருகிறாராம்.